சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல் கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வெள்ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.
கி.பி. 10
உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.
கி.பி. 21 - 42
குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வெள்ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.
கி.பி. 42 - 100
சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம்.
![]() |
கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் ( martin,1928 ) செய்த உருமாற்றம். |
ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.
கி.பி. 101 - 120
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.
கி.பி. 105
சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.
கி.பி. 107
ரோமப்பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.
கி.பி.120-144
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.
கி.பி.145-175
வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.
கி.பி.175-200
கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி)
![]() |
மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும் நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்: பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை(மேலே இடம்), சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில் மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல். |
கி.பி.180
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.
கி.பி.200
இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.
கி.பி.250-275
வரகுண பாண்டியன் ஆட்சி
கி.பி.275-300
மாணிக்கவாசகர் காலம்.
கி.பி.300-700
தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.
கி.பி.300-700
தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவமன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.
கி.பி.358
துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்
கி.பி.400
மனுதர்மம் அமைக்கப்பட்டது.
கி.பி.419
பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.
கி.பி.450-535
தெற்கில் போதிதர்மர் காலம்.
கி.பி.570-632
முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்
கி.பி.590-631
சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.
கி.பி.600-900
வைணவ ஆழ்வார் காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.
கி.பி.610
நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல். நபி நாயகம் 622ல் மெக்கா தப்பிச் செல்லல்.
கி.பி.630-644
சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம்.
![]() |
தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன் படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள். |
கி.பி.641-645
அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.
கி.பி.650
திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்
கி.பி.788
ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.
கி.பி.800
இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கெளதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.
கி.பி.825
சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.
கி.பி.850
மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.
கி.பி.900
குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம்.
![]() |
பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்). |
கி.பி.900
இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.
No comments:
Post a Comment