How to Add a Star Rating Widget in Blogger .txt Displaying How to Add a Star Rating Widget in Blogger .txt.
Showing posts with label Moral Story. Show all posts
Showing posts with label Moral Story. Show all posts

Saturday, 31 October 2015

தொழில்முனைவோர்களின் தலைமை பண்புகள்


leadership characteristics ,leadership qualities,       ஒவ்வொரு தொழில்முனைவோரும்(Entrepreneur) சிறந்த தலைவர்களை போல் செயல்படுவது அவசியமாகும். தலைவர்களுக்கு(Leader) உள்ள பொதுவான தலைமைப் பண்புகள்(Leadership Characteristics )  தொழில் முனைவோர்களுக்கு தேவைபடுகின்றன. தலைவர்களின் பொதுவான தலைமைப் பண்புகளை(Leadership Characteristics ) ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அவற்றில் சிலவற்றை C என்று ஆரம்பமாகும் எழுத்துகளில் வரிசைபடுத்தியுள்ளனர் .
தொழில்முனைவோர்களுக்கு(Entrepreneurs) தேவையான தலைமைப் பண்புகளில்(Leadership Qualities)  சில :
1.Curiosity (ஆர்வம்)
எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் . ஆர்வம் என்ற ஒரு பண்பு தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) தேவையான ஒன்றாகும் . தொடர்ச்சியான கற்றல், செயல்களை செய்தல் போன்ற பலவற்றிக்கு ஆர்வம் என்ற பண்பு தேவை .
2.Creativity (புதுமை)
புதுமையாக செய்வதில் நாட்டம் ,மாறுபட்டு சிந்திக்கும் திறன் ஒரு தொழிமுனைவோருக்கு(Entrepreneurs) தேவையான தலைமை பண்பாகும்(Leadership Qualities).
3.Communication( தொடர்பு)
பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) தேவையான பண்பாகும்.
4.Character (நற்குணம்)
நற்பண்பு , நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற பண்புகள் தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) மிகவும் அவசியம்.
5.Courage(துணிவு)
நாம் எந்த செயலை செய்து முடிக்கவும் தைரியம் மிகமுக்கியமானது. இடையில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலும் எடுத்துக்கொண்ட செயலை செய்து முடிக்க துணிவு அவசியமாகிறது . இதுபோன்ற பலவற்றை நிறைவேற்ற தைரியம் என்ற பண்பு தேவைப்படுகிறது.
6.Conviction (நம்பிக்கையும்,பிடிமானமும் வைத்திருப்பது)
நமது குறிக்கோள்கள்,செயல்கள் போன்ற பலவற்றிலும் நம்பிக்கையும்,பிடிமானமும் வைத்திருப்பது .
7.Charisma (வசீகரித்தல்)
பிறரை வசீகரிக்கும் ஆற்றல் வசீகரிக்கும் ஆற்றல் என்பது முக அழகை சார்ந்ததல்ல.அது நமது பேச்சின் மூலமாகவும் இருக்கலாம் , நடவடிக்கைகளின் மூலமாகவும் இருக்கலாம், நற்குணங்களின் மூலமாகவும் இருக்கலாம்.
8.Competence (ஆற்றல்,திறமை)
நிர்வாக ஆற்றல்,செயல் ஆற்றல் ,பேச்சு ஆற்றல் போன்ற பல ஆற்றல்கள் தொழில்முனைவோருக்குத் தேவைப்படுகின்றன.
9.Common Sense(இயல்பறிவு)
பொது புத்தி, புத்திசாலித்தனம் ,இயல்பறிவு ,அறிவுக் கூர்மை போன்றவை தொழில்முனைவோருக்கு அவசியம் .
                          தொழில்முனைவோர்கள்(Entrepreneurs) இப்படிப்பட்ட தலைமைப் பண்புகளை(Leadership Characteristics )  வளர்த்துகொள்ள வேண்டும். இந்த தலைமைப் பண்புகளை(Leadership Characteristics )  கொண்ட தொழில்முனைவோர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார்கள்.

பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்


placeholder[1]
ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்க நடவடிக்கையை மேற்கொண்டு செயல்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும். அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயல்திறனும் மேம்படும்.
அதனால் ஒவ்வொரு மேலாளரும் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் .
1. ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியை அவ்வபோது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும். நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபோது அவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அதனால் வகுப்பறை பயிற்சியாகவோ, நேரடி பயிற்சியாகவோ , இணையத்தின் மூலமான பயிற்சியாகவோ அவ்வபோது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் (Innovation) செய்து கொள்வது நல்லது.
2.ஒரு மேலாளர் தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தொழில்நுட்ப அமைப்புகளில் உறுபினராக சேரும் படியான சூழலை ஏற்படுத்தி அதற்கு ஆண்டு சந்தாவை தம்முடைய நிறுவனமே செலுத்தும்போது அந்த தொழிலாளர்கள் மனநிறைஉற்று தம்முடைய தொழில்நுட்ப அமைப்புகளின் மூலம் தமக்கு கிடைக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும், , ஆலோசனைகளையும் தம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடும் நிலை ஏற்படும் அதன்மூலம் அந்நிறுவனத்தின் (Organization) வளர்ச்சி (Growth) உறுதியாக இருக்கும்.
3.பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணையச் செய்து கல்வி சுற்றுலா செல்லுமாறு செய்தல், விளையாட்டு போட்டி நடத்துதல், நாடகம், பாட்டு போட்டி, பேச்சுப் போட்டி நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை நிறுவனத்தில் செயல்படுத்த வேண்டும். மேலும் இந்த நிகழ்வுகளில் பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு செய்தல் மறைமுகமாக அந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகும்.
4.பணியாளர்கள் அனைவருக்கும் அவரவர்கள் அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்டு செயல்படுமாறு அதற்கான சுழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தபின் அவர்களுள் அந்த இலக்கை அடைபவர்களுக்கு மட்டும் அவர்களின் செயலை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மற்ற பணியாளர்களுக்கு அவ்வாறு செயல்படுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டு அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் ( Productivity) மேம்படுத்துவதற்கான சுழல் ஏற்படுகின்றது.
5.நிறுவனத்திற்கு தேவையானதாக மாறிவரும் புதிய தொழில்நுட்பம் (Technology) , புதிய கண்டுபிடிப்புகள் (Invention) ஆகியவற்றை சார்ந்த புத்தாக்க வகுப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை பணியாளர்களுக்கு நடத்துவது, பணியாளர்களுள் சிறந்த புத்தாக்கம் நிறைந்த பணியாளர்களை இந்த வகுப்புகளில் தம்முடைய கருத்துகளை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறான வாய்ப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் திறனை மேம்படுத்த முடியும்.

SWOT ANALYSIS

                  நம் தொழிலின் ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றி கரமாக எடுத்துச் செல்வதற்கு பல்வேறு ஆய்வுகள்(Researches) மற்றும் பகுப்பாய்வுகள் (Analysis) தேவைப் படுகின்றன . இன்றைய உலகமயமாக்கல் காலக்கட்டத்தில் சிறிய நிறுவனத்தை நடத்தி வந்தாலும்  பல்வேறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளைச்    செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இத்தகைய ஆய்வுகளை செய்யாமல் புது யுக்திகளை புகுத்த முடியாது , புது யுக்திகளை புகுத்தாமல் இன்றைய தொழில் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது . 
அந்த வகையில் தொழிலுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒரு பகுப்பாய்வு SWOT Analysis.
 
      SWOT Analysis இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் , திட்டங்களை தீட்டுவதற்கு தேவையான தகவல்களை அளிக்கவும் , இலக்கை அடைவதற்கான தேவையான சாதக மற்றும் பாதகங்களை ஆராய்வதற்கும் ,  புது தொழிலை தொடங்குவதற்கு தேவையான தகவல்களை அளிப்பதற்கும் SWOT Analysis பயன்படுகிறது .
       SWOT Analysis
 Strengths(பலங்கள் Weaknesses(பலவீனங்கள்)Opportunities (வாய்ப்புகள் )Threats (அச்சுறுத்தல்கள்)
       SWOT Analysis பலங்கள் ,பலவீனங்கள் மற்றும் வாய்ப்புகள் , அச்சுறுத்தல்களை கண்டறிய இந்த பகுப்பாய்வு  பயன்படுகிறது .
 
      நாம் பலவித கேள்விகளை தொடுத்து அதற்கான பதில்களை அளிப்பதன் மூலம் நமது நிறுவனத்தின்  பலங்கள் ,பலவீனங்கள் மற்றும் வாய்ப்புகள் , அச்சுறுத்தல்களை கண்டறியலாம்.  
 
உள் மற்றும் வெளிப்புற காரணிகள்  (Internal and external Factors):-
 
             உள்ப்புற காரணிகள் — பலங்கள் மற்றும் பலவீனங்கள் ( நிறுவனத்திற்கு உற்பட்ட காரணிகளை சார்ந்தது- விலை (Price) ,பொருட்கள் (Product) ,சந்தை(Marketting) ,விற்பனை (Sales) ,நிதிகள் (Finance),உற்பத்தி(Production) ,ஊழியர்கள் (Employees) … போன்றவைகள் ).
 
                  வெளிப்புற காரணிகள் — வாய்ப்புகள்  மற்றும்  அச்சுறுத்தல்கள்  (நிறுவனத்திற்கு வெளிப்புற  காரணிகளை சார்ந்தது -தொழில்நுட்ப மாற்றம் (Technological Change), பொருளாதாரம் (Economy) ,அரசாங்கம்(Government), போட்டியாளர்கள் (Competitors), சமூகம் (Social) … போன்றவைகள்).
 
பலங்கள் (Strength):-
      நிறுவனங்கள் ஒரு திட்டத்தை தீட்டும் முன்பு தங்களது பலங்களை அறிந்து கொள்வது அவசியமாகும். நிறுவனத்திற்கு அனுகூலமாக  உள்ள பல விஷயங்கள்  நிறுவனத்தின் பலங்கள் ஆகும்.
 
  • நமது நிறுவனத்தில்  மற்ற நிறுவனத்தை விட சிறந்ததாக என்ன விஷயங்கள் உள்ளன ?
  • மற்ற நிறுவனத்தின் பொருட்களை விட நம் நிறுவனத்தின் பொருட்களில் உள்ள தனித்தன்மைகள் (Unique)  என்னென்ன?
  • என்ன வளங்களை மற்றவர்களை விட குறைவான விலையில் கொள்முதல் செய்ய முடியும் ?
  • நமது நிறுவனத்தின் பலங்களாக நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?
  • மற்ற நிறுவனத்தின் ஊழியர்களிடம் இல்லாத என்ன திறமை மற்றும் ஆற்றல் நம் நிறுவனத்தின் ஊழியர்களிடம் உள்ளது ?
  • மற்ற நிறுவனத்தின் பொருட்களை விட நமது நிறுவனத்தின் பொருட்கள் எந்த வகையில் வேறுபட்டது ?
  • நம்மிடம் என்ன   தனித்தன்மையான விற்பனை முறைகள் உள்ளன?
இந்த வகை கேள்விக்கான பதில்கள் நமது  பலங்களே.
 
         உயர்ந்த தரம்(High quality), மலிவான  விலை ,பிரபலமாக இருக்கும் பிராண்ட் பெயர் (Brand Name) ,நிதி ஆதாரம் (Finance Resources) ,கடன் இல்லாமை (No Debt), திறமையான ஊழியர்கள் ,சிறந்த நிர்வாகம் ,மேம்படுத்தப்பட்ட   தொழில்நுட்பம் , விரைவான உற்பத்தி போன்றவைகள் பலங்களே .
 
                 நாம் பலங்களாக பார்த்தவையெல்லம் நமது போட்டியாளர்களுடன்தொடர்புபடுத்த வேண்டும் . நம் போட்டியாளரும் உயர்ந்த தரத்தில்(High Quality) பொருட்களை விற்பனை செய்தால் தரம் என்பது நமது பலங்கள்(Strength) அல்ல . 
பலவீனங்கள் (Weaknesses):
               நமது பலவீனங்களை அடையாளம் காண்பதால் தொழிலை நிர்வகிப்பதற்கும்,மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது. நமது நிறுவனத்திற்கு ஏற்படும்  பாதகங்கள் போன்றவை  நிறுவனத்தின் பலவீனங்கள் ஆகும்.
 
         பலவீனங்களை நிறுவனத்தின் பார்வையில் இருந்து  மட்டும் பார்க்காமல் , நுகர்வோர் மற்றும் மக்களின் பார்வையிலிருந்தும்  பார்க்க வேண்டும்.
 
  • நம் விற்பனையை பாதிக்கும் காரணிகள் என்ன ?
  • நாம் மற்றவர்களை விட மேம்படுத்தபட வேண்டியவைகள் என்ன ?
  • எந்த வகையில் நாம் மற்றவர்களை விட பின்தங்கியுள்ளோம் ?
  • என்ன காரணிகள் நம்மை பாதிக்கின்றன ?
  • நமது நிறுவனம் மற்றும் நமது பொருட்களின் பலவீனங்களாக   நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?
 
        இது போன்ற பல கேள்விகளை எழுப்பும் போது கிடைக்கும் பதில்களே நமது பலவீனங்கள். நம் போட்டியாளர் நம்மை விட செய்யும் சிறந்தது எல்லாம் நம் பலவீனங்களே.
 
         அதிகமான விலை (High Price), குறைவான தரம் (Low quality),அதிகமான கடன் , போதிய நிதி ஆதாரம் இல்லாமை (Lack of Finance Resources),ஊழியர்களின் திறமையின்மை ,தலைமையின் நிர்வாகதத்  திறமையின்மை , பலவீ னமான மார்க்கெட்டிங் , பழைய தொழில்நுட்பம், உற்பத்திக்கான செலவு அதிகரித்து கொண்டே போகுதல் போன்ற பலவும்  பலவீனங்களே.
வாய்ப்புகள்(Opportunities):
         நிறுவனங்கள் ஒரு திட்டத்தை தீட்டும் முன்பும், இலக்கை நிர்ணயிக்கும்  முன்பும் வாய்ப்புகளை  அறிவது  அவசியமாகும். இந்த வாய்ப்புகளுக்கு  நமது இலக்கையும் ,திட்டமிடுதலையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு உண்டு.
 
  • விரிவடைந்து கொண்டே போகும் சந்தை(Broad Market) ,
  • தொழில்நுட்ப மாற்றம் (Changes in Technology ),
  • சந்தையில் ஏற்படும் மாற்றம் ( Changes in Market)
  • அரசாங்க கொள்கையில் மாற்றம் (Changes in Government Policy Related to Our field.) ,
  • பணப் புழக்கம் மக்களிடம் அதிகமாக இருத்தல் ,    
  • இளைஞர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக்  கொண்டே போகுதல் ,
  • மக்களின் ஊதியத் தொகை அதிகரித்தல ( Salary Hike) ,
  • மக்களின் வாழ்க்கை முறை ,பழக்கவழக்கள் , சமூகம் போன்றவற்றில்  ஏற்படும் மாற்றம் (lifestyle changes, population profiles, Changes in social patterns, and so on.)
 
       இவை போன்றவையெல்லாம் வாய்ப்புகளே . ஐஸ்க்  கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கோடைக்காலம் என்பது ஒரு வாய்ப்பு , Pulsar போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு இளைஞர்களின் எண்ணிக்கை  அதிகரிதல்  என்பது ஒரு வாய்ப்பு. நகைக் கடைகளுக்கு பண்டிகை காலம் என்பது ஒரு வாய்ப்பு .
அச்சுறுத்தல்கள்(Threats) :

        வெளிப்புறச் சுழ்நிலையில் நாம்  சந்திக்கும்  தடைகள் , பாதிப்புகள் எல்லாம் நமக்கு அச்சுறுத்தல்களே . இந்த அச்சுறுத்தல்களை நாம் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
 
 
  • மாறிவரும் தொழில்நுட்ப நமக்கு அச்சுறுத்தல்களாக அமையலாம்   (Changes in Technology maybe Threats to Us),
  • மோசமான உள்கட்டமைப்புகள் (Poor Infrastructures-Roads,Ports,Power and so on..),
  • புதிய போட்டியாளர்களின் வரவு ( Entry of New Competitors),
  • பண வீ க்கம் (Inflation),
  • பொருளாதாரம் மந்த நிலை(Economy Recession),
  • பாதகமான அரசாங்கத்தின் கொள்கைகள் (Adverse Government Policies),
  • மக்கள் செலவு செய்வதற்கு தயங்குதல்,
 இவை போன்றவையெல்லாம் அச்சுறுத்தல்களே.
 
            ஒரு சில பொருட்களுக்கு வாய்ப்புகளாக  உள்ளவை மற்ற நிறுவன பொருட்களுக்கு  அச்சுறுத்தல்களாக அமையலாம் .
 
         குடை(Umbrella)  தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மழைக் காலங்கள் என்பது வாய்ப்பு,ஆனால் ஐஸ் கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதுவே அச்சுறுத்தல்கள்.
 
       SWOT Analysis என்பது இலக்கு நிர்ணயிப்பதற்கு மற்றும் திட்டங்களை தீட்டுவதற்கு தொழிலுக்கு SWOT Analysis பயன்படுவது போலவே  நமது சுய வாழ்க்கைக்கும் இலக்கு நிர்ணயிப்பதற்கு பயன்படுகிறது .
 
     நாம் பலவீ னங்களை பலங்களாகவும் , அச்சுறுத்தல்களை வாய்ப்புகளாகவும்  மாற்ற முயற்சிப்போம்!      

நல்லி குப்புசாமி செட்டியாரின் (Nalli Silks) நிர்வாகவியல் விதிகள்

Busi             வெற்றியின் அடிப்படை  நிர்வாகவியல்  அம்சங்கள் என்ற தலைப்பில் சென்னை
எலும்பூரில் உள்ள 
Indian Institute Of Planing And Management   என்ற
நிர்வாகவியல் கல்லூரி M.B.A  மாணவர்களுக்கு 
  நல்லி குப்புசாமி செட்டியார் 
கருத்துரை வழங்கினார்
           நல்லி குப்புசாமி செட்டியார் இன்று  பட்டுப் புடவைக்கு மிகவும் பிரபலமாக உள்ள 
நல்லி சில்க்ஸ்(Nalli Silks)  நிறுவனத்தின்  உரிமையாளர் . அவர் தனது தொழில்
அனுபவத்திலிருந்து  கற்றுக் கொண்ட 
நிர்வாகவியல் உத்திகளை (Management
Techniques)
 மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் எடுத்துச் சொன்ன முக்கிய
நிர்வாகவியல்   கூறுகள் ( Management Techniques)
 :
1. பொருளின் தரம்(Quality of Product),
2.நேரத்தே பணி (Timed Task) ,
3.நேர்மை (Integrity) ,
4. வாடிக்கையாளர் மீதான அக்கறை (care with on  customer ),
5. புதுமையில் நாட்டம்( Propensity Of Innovation) ,
6.மாற்றங்களில் கவனம் (Focus on changes),
7.  பிறரது தோல்விகளிலிருந்து பாடம் பெறும் புத்திக் கூர்மை (Learn Lessons
from the failures of others ) ,
8. தன்னம்பிக்கை (Self Confident),
9. சாதகமில்லாத சூழ்நிலைகளிலும் சாதனை புரிவதில் நாட்டம் (Pursuit Of
Achievement in the  Unfavorable Situation)   ,
10. வாய்ப்புகளைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்வது (Take Advantage of
opportunities ) ,
11. ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பது (Providing Training to Employees).
போன்றவை ஒவ்வொரு தொழில் முனைவோரும் (Entrepreneurs)  பின்பற்ற வேண்டிய மிக
முக்கியமான
 நிர்வாகவியல் அம்சங்கள் (Management Strategy) .

வேலையை விடுத்து தொழில் தொடங்குவோருக்கான 20 வெற்றி உத்திகள்


entrepreneur                வேலையை  விடுத்து தொழில் தொடங்கலாமா? வேலையின் போது கிடைத்த அதே வருமானத்தை தொழிலில் ஈட்டுகிற   காலம்  எப்போது வரும்? தொழிலை  எங்கிருந்து தொடங்குவது? விலை நிர்ணயிப்பது எப்படி? பணத்திற்கு எங்கே போவது? என்பது போன்ற பல கேள்விகள்  தொழில் தொடங்க விரும்புவோருக்கு எழும்.
             தொழிலில் மிக முக்கியமான காலக்கட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டமே. இந்தக்  காலகட்டத்தைக் கடந்து விட்டால்,பாதித் தொலைவு தாண்டியது மாதிரி.
             தொழில்முனைவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து, பிறகு சிறிய முதலீட்டில் தனியொரு ஆளாகத் தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு பிறகுதான் வளரத் தொடங்கி இருப்பார்கள்.

கவலையை கழற்றி வீசுங்கள்

worry  கவலை என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒருவித சொத்து. அதன் உருவங்கள் மாறலாம். ஆனால் அதன் அழுத்தம் ஒன்றாகவே இருக்கும். கவலையே இல்லாத மனிதர் யாருமே இல்லை. நமக்குத்தான் இவ்வளவு பெரிய சோகம் இருக்கிறதென்று பொதுவாக அனைவரும் எண்ணுகின்றனர். ஆனால் ஒவ்வரிடமும் ஒவ்வொரு விதத்தில் கவலையின் ஆட்சி இருக்கிறது.
    கவலை என்று அதையே நினைத்துக் கொண்டு இருப்பதை தவிர்த்து மனதின் திசைகளை மாற்றுங்கள். கொஞ்சம் சிரமமான காரியம்தான் இருந்தாலும் அதனைச் செய்தாக வேண்டும். மனம் தன் இயல்புகளை மாற்றிக் கொண்டே இருந்தால் கவலை என்ற பேய் விரட்டப்படுகிறது. சிலருக்கு லச்சியவெறி என்று ஒன்று இருக்கலாம். அதற்காக நம்மால் இது முடிகிற காரியமா….? என்று மலைத்து நிற்காமல் செயலில் இறங்க வேண்டும். இதுதான் மனதின் திசைமாற்றல் எனப்படும். இப்படி ஒவ்வொன்றாக மனதின் திசைகளை மாற்றிக் கொண்டே போனால் குறிப்பிட்ட இலக்கை கவலைகள் இன்றி அடையலாம். மனித சக்தியை மீறி எதுவுமே கிடையாது.

PMEGP-Prime Minister’s Employment Generation Programme

ரூ.25 இலட்சம் வரை தொழில் தொடங்க கடன் பெற உதவும் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme)

PMEGP-Prime Minister’s Employment Generation Programme  தொழில் தொடங்க நிறைய முதலீடு (Capital) தேவைப்படுகின்றன. தொழில் துவங்கும் எண்ணம் கொண்ட நிறைய பேர் தொழிலுக்குத் தேவையான பண முதலீடு (Investment) தங்களிடம் இல்லாததால் தங்கள் கனவுகளை பாதியிலேயே கைவிடுகின்றனர். தொழில்முனைவோர் தொழில்களை தொடங்குவதற்கான முதலீட்டை (Capital) பெறபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) உதவுகிறது. தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான நிதியுதவியை பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP-Prime Minister’s Employment Generation Programme) மூலம் பெறலாம். இத்திட்டமானது Prime Minister’s Rojgar Yojana (PMRY) மற்றும் Rural Employment Generation Programme (REGP) ஆகிய இரண்டையும் இணைத்து, 2008 ஆகஸ்டு ஆண்டு 15ம் தேதியன்று உருவாக்கப்பட்டது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்

தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் கிடைக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)

தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை மானியத்துடன் கடன் கிடைக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme)   தமிழ்நாட்டில் அதிக தொழில் முனைவோரை உருவாக்க New Entrepreneur -cum- Enterprise Development Scheme-NEEDS (புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்) என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது. NEEDS (New Entrepreneur -cum- Enterprise Development Scheme) திட்டத்தில் ரூ.5 இலட்சத்திற்கு மேலும் அதிகபட்சமாகரூ.1 கோடி வரையிலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரசு மானிய உதவியாக தொழில் திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடும்அதிகபட்சமாக 25இலட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe
');