How to Add a Star Rating Widget in Blogger .txt Displaying How to Add a Star Rating Widget in Blogger .txt.

Friday, 16 October 2015

தமிழர் வரலாறு - கி.பி. 1677 முதல் - கி.பி. 1801 வரை


கி.பி. 1677

விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.

கி.பி. 1682-1689

அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.

கி.பி. 1688-1706

இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. 'மங்கம்மாள் மலைமேற் சோலை' எனப் பாராட்டப் பட்டுள்ளது.

கி.பி. 1700

உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165  மில்லியன்.


கி.பி. 1705-1742

தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.
புதைபடிவ மனிதர்கள்.
மேல் வரிசை - மாக்ன்னியன்
நடு வரிசை - நியாண்டெர்தல்
கீழ் வரிசை - சீணாந்திரோப்பஸ்
(மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி.பி. 1706

மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.

கி.பி. 1712

மருத பாண்டியன் சாதாரண நிலையிலும் தோன்றி திறமையாலும் தொண்டாலும் சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன். அரசியல் முன்னோக்குப் பார்வையும், செயல்வன்மையும், பெற்று சிவகங்கையின் ஒப்பற்ற தலைவன் ஆனார். 1712 ல் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடிக்கவிருந்த சிவகங்கையை மீட்டார். அதைப் பழைய அரச குடும்பத்திடம் ஒப்படைத்தார்.

இராமநாதபுரத்து மேலப்பனும், சிங்கம் செட்டியும், முத்துக் கருப்பனும், தஞ்சை ஞானமுத்துவும் மருது பாண்டியனின் தலைமையை ஏற்றனர், திருநெல்வேலியில் உள்ள பாளையக்காரர்களின் பக்க வலிமையையும் சேர்த்துக்கொண்டு புரட்சிக்காரர்களின் கூட்டிணைப்பு ஒன்றினை உருவாக்கினார், வரிகொடா இயக்கம் இராமநாதபுரத்தில் துவங்கியது. மேலப்பன் தீவிரவாதியாக மாறினார். சிறைக்கு சென்று பின்னர் தப்பித்தார். இராமநாதபுரத்தில் வரிகொடா இயக்கத்தை துவங்கினார்.

கி.பி.1751

ஆங்கிலேய 26 வயது தளபதி இராபர்ட் கிளைவ் ஆற்காடு நகரை பிரெஞ்ச் அரசிடமிருந்து கைப்பற்றினாரர்.

கி.பி.1760 ஏப்பிரல் 4

பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்

கி.பி.1761

புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கி.பி.1761

திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினான். 1761-ல் தோற்கடிக்கப்பட்டான்.

கி.பி.1761

சகவீர பாண்டியன் மகன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் முப்பதாவது வயதில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். மருது பாண்டியர்களுடன் நல்லுறவில் இருந்தார்.

கி.பி.1795-1799

பல பாளையங்களை ஆங்கிலேயர்கள் நசுக்கினர்.

கி.பி.1799

திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

கி.பி.1799

செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மன் மேஜர் பார்னனுக்கு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை காட்டில் மறைந்திருந்தான். காலப்பூர் என்ற காட்டிலிருந்த கட்டபொம்மனைப் புதுகோட்டை அரசன் விஜயரகுநாதத் தொண்டைமான் கைது செய்து ஒப்படைத்தான்.

கி.பி.1799

அக்டோபர் 16 - ஆம் தேதி கயத்தாற்றில் வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டான். கடைசி நிமிடத்திலும் வீரத்தைக் காட்டி, இன உயர்வை நிலைநாட்டி விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தினான். பானர்மன் எழுதிய அறிக்கையில் "வீரபாண்டியக் கட்டபொம்மன் பகைவரும் போற்றும் பண்பிலும் வீரத்திலும் சிறந்திருந்தார். என எழுதப்பட்டிருக்கிறது.

கி.பி.1799

புரட்சிக்காரர்கள் காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பெற்றனர். பண்டாரகங்களைச் சூறையாடிப் பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவு அளித்தனர். பாலமனோரியில் நடைப்பெற்ற போரில் சிங்கம் செட்டி கொல்லப்பட்டான்.

கோபாலநாயக்கர்:
திப்பு சுல்தான் படைத் துணையுடன் கோபாலநாயக்கர் கண்காணிப்பில் புரட்சிக்காரர்கள் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்பு பண்டங்களையும் பறித்தனர். விருப்பாட்சி பாளையக்காரராக விளங்கியவர் கோபால நாயக்கர். மருதபாண்டியருடனும் அண்டை தேசத்து துண்டாசியுடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்புடன் தென்னக கூட்டினை உருவாக்கினார். மருதபாண்டியன் தலைமையில் இராமநாதபுரம் சீமையானது. கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டிணைவுகளுடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூண்டாசியும் கிருட்டிணப்ப நாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் புரட்சித்தலைவர்களாக உருவாகி கூட்டிணைப்பு மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் தேபக்தர்கள் இயங்கினர். ஈரோட்டு மூதார் சின்னனும், கானி சாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள்.

கி.பி.1800

இந்திய மக்கட் தொகை 200 மில்லியன்

கி.பி.1800 - 1801

தென்னிந்திய விடுதலைப்புரட்சி (முதல் விடுதலை போராட்டம்) உருவானது. மன்னர்கள் செயலிழந்தனர். பாளையக்காரர்கள் மக்களின் நலன்களைப் பேணி உரிமைகளைக் காத்து நின்றனர். கோட்டைகளையும் படைபலத்தையும் கொண்டு மக்கள் தொடர்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். அயலார் ஆதிக்கத்தை ஏற்கவில்லை. திராவிட பண்பாட்டு நிறுவனங்களும், ஆங்கிலேய பண்பாட்டு நிறுவனங்களும் மோதின.

கி.பி.1800 - 1801

தமிழகத்தில் நடைப்பெற்ற முதல் விடுதலை போராட்டம், மருதபாண்டியனின் ஸ்ரீரங்கம் அறிக்கை, இந்திய விடுதலை இயக்கவரலாற்றின் துவக்க விழாவாகவும் எல்லைக் கல்லாகவும் அமைந்தது.

கி.பி.1801

மே22, பாஞ்சாலங்குறிச்சியில் போர், மழை, இடி, புயல், ஏற்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது. ஊமைத்துரை காயங்களுடன் கமுதியை அடைந்தபோது மருத பாண்டியன் வரவேற்பு அளித்தான்.
பருமனில் உதடுகளின் வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகள் (முகப்பு தோற்றமும் இடப்புறத் தோற்றமும்):
1 - மெல்லியவை
2 - நடுத்தரமானவை
3 - பருத்தவை
4 - உப்பியவை

கி.பி.1801

அக்டோபர் 24 ஆம் நாள் வெள்ளை மருது, சின்ன மருது, செவத்தம்பி, முத்துக்கருப்பன் என பலரும் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

கி.பி. 1801

நவம்பர் மாதம் 16ஆம் நாள் ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் கொல்லப்பட்டான்.

No comments:

Post a Comment

Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe
');