சென்னை (தற்போதைய தென் இந்தியா) மாநிலத்தை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி செய்தது.
கி.பி. 1804
இராமசாமி என்ற தாசன் தலைமையில் கோயம்புத்தூரில் ஒரு விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது.
கி.பி. 1806
சூலை 10 ஆம் நாள் வேலூரில் சிப்பாய்க்கலகம்.
கி.பி. 1812
நெப்பொலியன் உருசிய போரில் மிகுந்த சேதத்துடன் திரும்பினான். 500,000 போராளிகளில் 20,000 போராளிகளே உயிருடன் திரும்பினர்.
கி.பி. 1814
முதல் புகை வண்டி விடப்பட்டது.
கி.பி. 1820
அமெரிக்காவை முதல் புலம் பெயர்ந்த இந்தியர் அடைந்தார்.
கி.பி. 1822-1892
யாழ்ப்பாணத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர் காலம். வேதங்களுடனும், ஆகமங்களுடனும் ஒத்து நோக்க தமிழில் பைபிளை மொழி பெயர்த்தார்.
கி.பி. 1823-1874
இராமலிங்க வள்ளலார் காலம். வடலூர் சத்திய சன்மார்க்க சபை அமைத்தவர். போலிக் கடவுட் தன்மையினை சாடியவர். மனித நேயத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்.
கி.பி. 1825
அதிக அளவு தமிழர்கள் ரியூனின், மொரிசியஸ் தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.
கி.பி. 1835
19,000 தமிழர்களும் மற்றவர்களும் மொரிசியஸ் தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.
கி.பி. 1841
தென்னாற்காடு மாவட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.
கி.பி. 1852
சென்னை தன்னுரிமை நலக்கழகம் தொடங்கப்பட்டது.
மெக்ஸிக்கோவைச் சேர்ந்த அத்ஸேக் இந்தியன். (மங்கோலிய வகைப் பெரிய இனத்தின் அமெரிக்க கிளை). |
கி.பி. 1856
கத்தோலிக்க பாதிரியர் கால்டுவெல்டு "திராவிடர்" என்ற சொல் தென்னிந்தியரைக் குறிப்பதாகும் எனக் குறிப்பிட்டார்.
கி.பி. 1857
இந்தியச் சிப்பாய் கலகம்.
கி.பி. 1860
தமிழ் மக்களும், வங்காள மக்களும் இந்திய, ஆப்பிரிக்க ஆங்கிலேயரிடையே ஏற்பட்ட 51 வருட உடன்படிக்கையால் தோட்டத் தொழில் செய்ய ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டனர்.
கி.பி. 1869-1948
நாட்டின் தந்தை எனப்படும் மகாத்துமா காந்தியின் காலம். கத்தியின்றி இரத்தம் இன்றி சாத்வீக வழியில் இந்திய ஆளுரிமையைப் பெற்றுத் தந்தவர்.
கி.பி. 1875
சீமாட்டி பிளாவிட்சுகி சென்னை அடையாற்றில் கடவுணர்வு சங்கம் அமைத்தார். அன்னிபெசன்ட் அம்மையார் இந்த அமைப்பில் 1907-1933ல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
கி.பி. 1876
கிரகம் பெல் தொலைபேசி கண்டுபிடித்தார்.
கி.பி. 1877
ஈழ நாட்டின் ஆனந்த குமாரசாமி காலம். தமிழக ஓவியக் கலைகளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.
கி.பி. 1879
தாமசு ஆல்வா எடிசன் (1847-1931) மின் விளக்கு கண்டுபிடித்தார்.
கி.பி. 1879-1950
இரமண மகரிசி காலம். திருவண்ணாமலை முனி எனப்பட்டவர்.
கி.பி. 1885
இந்திய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
கி.பி. 1885
விசையுந்து வண்டி கார்ல் பென்ஸ் என்ற ஜெர்மனியரால் செய்யப்பட்டது.
கி.பி. 1887-1920
இராமானுஜம்; உலகப் புகழ் கணித மேதை. ஈரோடு தமிழ் நாட்டில் பிறந்தவர்.
கி.பி. 1888-1952
சி.பி. இராதாகிருட்டிணன் காலம். இந்திய இரண்டாம் குடியரசுத் தலைவர்.
கி.பி. 1888-1970
சி.வி. இராமன்; ஆராய்ச்சியாளர். முதலாவதாக நோபல் பரிசு பெற்ற தமிழர்.
கி.பி. 1894
இந்தியர்களை வெளிநாடுகளுக்குக் கட்டாய வேலைக்காக அனுப்புவது நிறுத்த மகாத்மா செய்த மனு வெற்றியானது
கி.பி. 1893-1974
அறிவியல் அறிஞர் ஜி.டி நாயுடு காலம். தமிழ் நாட்டின் தொழில் நிறுவனர் ஆராய்ச்சியாளர்.
கி.பி. 1894-1977
தமிழீழத் தந்தை செல்வா காலம். வாழும் தமிழர் எங்கும் தன்னுரிமையுடன் இருக்க வேண்டும் என்று தன்னலமற்ற உழைப்பை நல்கியவர்.
கி.பி. 1897
சுவாமி விவேகானந்தா இராமகிருட்டிண மடத்தை நிறுவினார்.
கி.பி. 1898-1907
காலராவில் 370,000 மக்கள் உயிரிழ்ந்தனர். இருபதால் நூற்றாண்டில் தமிழ்நாடு. சென்னை மாநிலம் குமரிமுனை முதல் ஒரிசாவரையிலும், மலபார்கன்னடப்பகுதிகள், ஆந்திரதேசமும் இணைந்து விளங்கியது. இருபதாம் நூற்றாண்டு பிரச்சினைகளுடன் அடியேடுத்து வைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களிடையே பண்பாட்டுணர்வும், பண்பாட்டு முனைப்பும் மேலோங்கி இருந்தன. பாரதியாரின் புரட்சிக்குரலும், வ.உ.சிதம்பரனார் இயக்கங்களும் மக்களை இழுத்தன. உரிமைக்குரல் கொடுக்க இனவாரி அமைப்புகள் தோன்றின.
கி.பி. 1900
செப்டெம்பர் 10 ஆம் நாள் தஞ்சை, மன்னார்குடி, மயிலாடுதுறை இணைத்து தஞ்சை மாவட்டம் ஆக்கப்பட்டது.
1902-1981
மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் காலம். அவர் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்கள் பல.
1905-1912
தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் தலைமையிலும் 1913 முதல் 1919 வரை பல தலைவர்கள் தலைமையிலும் விடுதலை இயக்கம் புரட்சிப்பாதையில் முன்னேறியது.
1905
பாரதியார் பொது மேடைகள் வழியாகவும் மையூற்றி முனை மூலமாகவும் தேசிய உணர்ச்சியைத் தூண்டினார்.
1908
தூத்துக்குடியில் அயலார் கப்பல் ஆதிக்கத்தை வ.உ.சிதம்பரனார் தலைமையில் எதிர்த்தனர்.
1908-1957
என்.எஸ்.கிருட்டிணன் காலம். வெள்ளித்திரை மூலமும் பாமரமக்களுக்கு பகுத்தறிவு படைக்கமுடியும் என்ற அப்பட்டமான உண்மையைப் புலப்படுத்தியவர். தற்கால நகைச்சுவைக்கு இலக்கணம் படைத்தவர்.
1910
வ.வே.சு.ஐயர் நாடு விடுதலை வேண்டி. தியாகப்பலிக்கு தயாராகுங்கள். 'பாரத மாதா அழைக்கின்றாள்' '1857 திரும்புகிறது' ஆகிய புத்தகங்கள் வெளியிட்டார். உருசியாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிப்பதை கற்றுவந்தார். சிறந்த தமிழறிஞர். கம்பனுக்கும் வள்ளுவருக்கும் உரை கண்டவர்.
1910-1998
சந்திர சேகர்; ஆரயிச்சியாளர். நோபல் பரிசு பெற்ற இரண்டாம் தமிழர்.
1911
சூன் 17 ஆம் நாள் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆசுதுரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தன்னுயிரையும் போக்கிக் கொண்டார்.
1912
திராவிடர் அமைப்பு தோன்றியது. 1916 டிசம்பரில் தென்னிந்தியர் நல உரிமைக்கழகம் தோன்றியது. பின் நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. வைதீகர் ஆதிக்கத்தாலும், சாதிக்கொடுமையாலும் புண்பட்டிருந்த மக்களிடத்தில் தனித்தமிழ்ப் பற்று ஏற்பட்டது.
1912-1974
மு.வரதராசனார் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவருக்குத் தனியிடம் உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதன் முதலாக பேரறிஞர் (டாக்டர்) பட்டம் பெற்றவர். 85 நூல்கள் எழுதியுள்ளார்.
1916
அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.
1917
உருசியாவில் லெனின் தலைமையில் செஞ்சட்டையினர் ஆட்சி அமைத்தனர்.
1918
திரு.வி.கலியாணசுந்தரனார், கேசவபிள்ளை, வாடியா முதலியோர் சென்னையில் முதல் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினர்.
டாக்டர் டி.எம்.நாயர், தியாகராக செட்டியார், கேசவப்பிள்ளை, நடே முதலியார் போன்றோர் சாமானியர் உரிமைகளுக்காகவும், வைதீகர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் இயக்கங்களில் ஈடுபட்டனர்.
1918
முதல் உலகப் போர் முற்றுப் பெற்றது.
1920
தன்னாட்சி கட்சி (Home Rule League) தோற்றுவிக்கப்பட்டது. சுப்புராயுலு தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. வில்லிங்டன் சென்னை ஆளுநர்.
1921
தேவதாசியர் என்ற பெண்ணடிமை சட்ட பூர்வமாக நீக்கப்பட்டது. பெண்கள் ஓட்டுரிமை பெற்றனர்.
1922-1988
அகிலன் பிறந்தது பெங்களூர், புதுக்கோட்டை மாவட்டம். 1938லிருந்து 40 ஆண்டுகளாக தொடர்ந்து சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியவர். அவருடைய 'பெண்' என்ற நாவல் கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் அதன் முதல் ஆண்டிலேயே முதற் பரிசை பெற்றது. அதைத் தொடர்ந்து அவருடைய நாவல் படைப்புகள் ஞானப்பீடப் பரிசு, சாகித்திய அகதமிப் பரிசு, நேரு பரிசு, போன்ற ஏராளமான பரிசுகளைப் பெற்றன. அவருடைய படைப்புகள் வார்த்தைகளால் கட்டப்பட்ட கலை வடிவங்கள்.
No comments:
Post a Comment