How to Add a Star Rating Widget in Blogger .txt Displaying How to Add a Star Rating Widget in Blogger .txt.

Saturday, 31 October 2015

தொழில்முனைவோர்களின் தலைமை பண்புகள்


leadership characteristics ,leadership qualities,       ஒவ்வொரு தொழில்முனைவோரும்(Entrepreneur) சிறந்த தலைவர்களை போல் செயல்படுவது அவசியமாகும். தலைவர்களுக்கு(Leader) உள்ள பொதுவான தலைமைப் பண்புகள்(Leadership Characteristics )  தொழில் முனைவோர்களுக்கு தேவைபடுகின்றன. தலைவர்களின் பொதுவான தலைமைப் பண்புகளை(Leadership Characteristics ) ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அவற்றில் சிலவற்றை C என்று ஆரம்பமாகும் எழுத்துகளில் வரிசைபடுத்தியுள்ளனர் .
தொழில்முனைவோர்களுக்கு(Entrepreneurs) தேவையான தலைமைப் பண்புகளில்(Leadership Qualities)  சில :
1.Curiosity (ஆர்வம்)
எதையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் . ஆர்வம் என்ற ஒரு பண்பு தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) தேவையான ஒன்றாகும் . தொடர்ச்சியான கற்றல், செயல்களை செய்தல் போன்ற பலவற்றிக்கு ஆர்வம் என்ற பண்பு தேவை .
2.Creativity (புதுமை)
புதுமையாக செய்வதில் நாட்டம் ,மாறுபட்டு சிந்திக்கும் திறன் ஒரு தொழிமுனைவோருக்கு(Entrepreneurs) தேவையான தலைமை பண்பாகும்(Leadership Qualities).
3.Communication( தொடர்பு)
பேச்சு, எழுத்து ,சைகை போன்றைவை பிறரை தொடர்புகொள்ளும் வழியாகும். அவை சரியானதாகவும், தெளிவானவானதாகவும் அமைய வேண்டும். பிறரை நமக்கு சாதகமாக இணங்கவைக்கும் ஆற்றல் கவனிக்கவைக்கும் ஆற்றல் போன்றவை தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) தேவையான பண்பாகும்.
4.Character (நற்குணம்)
நற்பண்பு , நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற பண்புகள் தொழில்முனைவோருக்கு(Entrepreneurs) மிகவும் அவசியம்.
5.Courage(துணிவு)
நாம் எந்த செயலை செய்து முடிக்கவும் தைரியம் மிகமுக்கியமானது. இடையில் ஏதாவது தடைகள் ஏற்பட்டாலும் எடுத்துக்கொண்ட செயலை செய்து முடிக்க துணிவு அவசியமாகிறது . இதுபோன்ற பலவற்றை நிறைவேற்ற தைரியம் என்ற பண்பு தேவைப்படுகிறது.
6.Conviction (நம்பிக்கையும்,பிடிமானமும் வைத்திருப்பது)
நமது குறிக்கோள்கள்,செயல்கள் போன்ற பலவற்றிலும் நம்பிக்கையும்,பிடிமானமும் வைத்திருப்பது .
7.Charisma (வசீகரித்தல்)
பிறரை வசீகரிக்கும் ஆற்றல் வசீகரிக்கும் ஆற்றல் என்பது முக அழகை சார்ந்ததல்ல.அது நமது பேச்சின் மூலமாகவும் இருக்கலாம் , நடவடிக்கைகளின் மூலமாகவும் இருக்கலாம், நற்குணங்களின் மூலமாகவும் இருக்கலாம்.
8.Competence (ஆற்றல்,திறமை)
நிர்வாக ஆற்றல்,செயல் ஆற்றல் ,பேச்சு ஆற்றல் போன்ற பல ஆற்றல்கள் தொழில்முனைவோருக்குத் தேவைப்படுகின்றன.
9.Common Sense(இயல்பறிவு)
பொது புத்தி, புத்திசாலித்தனம் ,இயல்பறிவு ,அறிவுக் கூர்மை போன்றவை தொழில்முனைவோருக்கு அவசியம் .
                          தொழில்முனைவோர்கள்(Entrepreneurs) இப்படிப்பட்ட தலைமைப் பண்புகளை(Leadership Characteristics )  வளர்த்துகொள்ள வேண்டும். இந்த தலைமைப் பண்புகளை(Leadership Characteristics )  கொண்ட தொழில்முனைவோர்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார்கள்.

No comments:

Post a Comment

Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe
');