How to Add a Star Rating Widget in Blogger .txt Displaying How to Add a Star Rating Widget in Blogger .txt.

Wednesday, 28 August 2024

TNPSC G.K - 1 | நிலக்கடலை.

 (Groundnut) வேர்க்கடலை என்ற Fabaceae குடும்பத்தைச்சேர்ந்த மணிலாக்காயின் தாவரவியல் பெயர் Arachis hypogea ஆகும்.நிலக்கடலை பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்களால் உண்ணப்பட்டு வரும் உணவுப்பொருள். நமக்கு வேர்க் கடலை அறிமுகமானது கடந்த நூற்றாண்டுகளில்தான். வேர்க்கடலை, மணிலாக்கடலை, மல்லாட்டை, மணிலாக் கொட்டை, கடலை முத்து எனப் பல பெயர்களில் வழங்கப்படும். இதன் பூர்விகம் தென் அமெரிக்க கண்டம்தான். ஏழாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே நிலக்கடலையை தென் அமெரிக்கர்கள் சாகுபடி செய்திருக்கிறார்கள். வடமேற்கு அர்ஜென்டினாவில் தொடக்கத்தில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் பின்னர் அங்கிருந்து பெரு, ஈக்வடார், பொலிவியா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இன்று நிலக்கடலையை சீனா, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளும் அதிகமாக சாகுபடி செய்து வருகிறது. இந்தியாவில் முதலில் வளர்ப்பு பன்றிகளுக்கான தீவன பயிராகத்தான் அறிமுகமானது. குறிப்பாக தமிழகத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்தான் முதலில் பயிரிட்டு எண்ணை எடுக்கப்பட்டு நல்லெண்ணைக்கு (Sesame oil) மாற்றாக பர்மாவிற்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் இங்கும் பயன்பாட்டிற்கு வந்தது.




பயன்கள்:


  • நிலக்கடலையை பச்சையாகவோ, அவித்தோ அல்லது வறுத்தோ உண்ணப்படுகிறது.
  • நிலக்கடலையுடன் வெள்ளம் சேர்த்து கடலை மிட்டாய் தயாரிக்கப்படுகிறது.
  • நிலக்கடலை எண்ணெய் பொதுவாக சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  • கடலை புண்ணாக்கில் (Groundnut cake) லைசின் மற்றும் குளூட்டமைன் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளதோடு நார்ச் சத்து, கச்சா புரதம், மற்றும் கொழுப்பும் நிறைந்துள்ளது. எனவே கடலை புண்ணாக்கு மாடுகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.
  • கடலை புண்ணாக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
  • நிலக்கடலையில் உள்ள புரதத்திலிருந்து அர்டில் (Ardil) என்ற செயற்கை இழை (Synthetic fibre) தயாரிக்கப்படுகிறது.
  • வேர்க்கடலையை அரைத்து வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter) தயாரித்து பயன்படுத்தப்படுகிறது.
  • வேர்கடலையின் எண்ணெயிலிருந்து பெயிண்ட், வார்னிஷ், உயவு எண்ணெய் (Lubricant) பூச்சிக்கொல்லிகள், நைட்ரோகிளிசரின் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
  • நிலக்கடலையில் மாங்கனீசு சத்து அதிகமாக உள்ளதால் நாம் உண்ணும் உணவில் உள்ள கால்சியம் சத்துகள் நமது உடலுக்கு கிடைக்க இது பயன்படுகிறது.
  • நிலக்கடலையின் தோலில் ரெஸ்வரெட்ரால் உள்ளதென சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது இதய நோய்கள் வராமல் தடுக்கவல்லது என குறிப்பிடத்தக்கது.
  • ஹைட்ரஜனேற்றிய எண்ணெய் (Hydrogenated oil) ஆனது வனஸ்பதி/ தாவர நெய் (Vegetable ghee) தயாரிக்கப் பயன்படுகிறது.
  • நிலக்கடலையில் உள்ள தாமிரம் (Copper) மற்றும் துத்தநாக (Zinc) சத்தானது தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது. மேலும், நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானாது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. அது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் சிரமமின்றி உண்டாகும்.
  • நிலக்கடலையில் அதிகமாக உள்ள "போலிக் அமிலம்” (Folic acid) இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • உதாரணமாக, நமது ஊரில் நிலக்கடலை பயிரிடப்பட்டிருக்கும் வயலில், காய் பிடிக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அதிகமாக குட்டி போடுவதைக் காணலாம்.
  • நிலக்கடலை எண்ணெயில் 46% நிறைவுறா கொழுப்புகள் (முதன்மையாக ஒலீயிக் அமிலம்), 32% பல்நிறைவுறா கொழுப்புகள் (Poly Unsaturated Fatty Acids) (முதன்மையாக லினோலெயிக் அமிலம்), மற்றும் 17% நிறைவுற்ற கொழுப்புகள் (Saturated Fatty Acids) (முதன்மையாக பால்மிட்டிக் அமிலம்) உள்ளன.
  • நீர் மற்றும் மைய விலக்கல் முறையை (Centrifugation method) பயன்படுத்தி நிலக்கடலையிலிருந்து பெறப்பட்ட எண்ணெயினை எதிர்காலத்தில் நீண்ட கால மனித விண்வெளி பயணங்களுக்கு பயன்படுத்த அமெரிக்க விண்வெளி ஆய்வுமையமான நாசா (NASA) பரிசீலனை செய்துவருகிறது.
  • மேலும் பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment

Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe
');