Friday 16 October 2015

தமிழர் வரலாறு - கி.பி. 1923 முதல் கி.பி. 1947 வரை


1923 

தன்னாட்சி கட்சியைத் தோற்கடித்து பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை செயல்பட்டது.

1924

ஜான் மார்சல் (1876-1958) சிந்து சமவெளி புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.

1925

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம்.

1926

தன்னாட்சி கட்சி ஆதரவுடன் சுயேட்சையான சுப்புராயன் அமைச்சரவையை ஏற்படுத்தினார்.

1927-1981

கவிஞர் கண்ணதாசன் "சங்க இலக்கியத்தைத் தங்க இலக்கியமாய் மனதில் தங்க வைத்தவன்" இக்கவிஞன். இராமநாதபுரம் சிறுகூடற்பட்டியில் பிறந்தவர். பேரறிஞர் அண்ணா பாசறையில் பாடம் படித்தவர். "காற்றுக்கு மரணமில்லை, கண்ணதாசன் கவிதைக்கும் மரணமில்லை". ஆனாலும் இவர் 1981ல் அமெரிக்காவில் தன் உடல் துறந்தார்.



1930

முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது.

1930-1959

பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்.

1931

காமராஜர் மீது கொலைசதி, வெடி குண்டு வழக்கு. வ.உ.சி. வாதாடி காமராஜரையும் தொண்டர்களையும் காப்பாற்றினார்

1932

சட்ட மறுப்பு இயக்கம் தொடக்கம். போப்பிலி அரசர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.

1932

அக்டோபர் 1 ஆம் நாள் சட்ட மறுப்பு நாள் திருப்பூர் குமரன் என்னும் குமாரசாமி தொண்டர்களுடன் கொடியேந்தி வந்தேமாதரம் முழங்கினார். காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார். கொடி காத்த குமரன் அமரர் ஆனார். இராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாகிரகம் திருமறைக்காடு (வேதாரண்யம்) யாத்திரை. ஓமந்தூர் இராமசாமி. ஓ.வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம், பம்பாய் தமிழ் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நூறு தொண்டர்கள் "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது"- நாமக்கல் கவிஞர் பாடலைப் பாடினார்கள்.

1934

போப்பிலி அரசர் முதலமைச்சர் ஆனார்.

1937

1937 வரை நீதிக்கட்சியினர் பதவியில் நீடித்தனர். நீதிக்கட்சியினரின் சாதனைகள். ஓர் இனத்தாரின் ஏகபோக பதவிக் குத்தகையை ஒழித்தது. உயர் பதவிகள் எளிதில் எல்லா இனத்தாருக்கும் கிடைக்க வழி வகுத்தது.

எளியோர் கல்வி பெற கட்டணச் சலுகையும் நிதி உதவியும் அளித்தது. பேரூர்களுக்கும், சிற்றூர்களுக்கும் கல்வி கிடைக்க தொடக்கப்பள்ளி கொண்டு வரப்பட்டது. மதிய உணவுத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925

ஆந்திர பல்கலைக்கழகம் உருவாகியது.

1928 

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. தொழில் சட்டம், தொழில் விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப ஆய்வு ஆகியவற்றிற்கு உதவியது. தேவதாசி முறையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.

1921

பெண்ணுக்கு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1937

சி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைச்சர் அவை சென்னை மாநிலத்தில் சுயாட்சியை நட்த்தியது. மதுவிலக்குச் சட்டத்தால் மக்களுக்கு நன்மை செய்தது.

1938
ஆலயம் புகும் சட்டம் சாமான்யர்களுக்கு சமய விடுதலை அளித்தது இந்தி கொள்கை இந்தி எதிர்ப்பை வரவழைத்தது. இந்தி எதிர்ப்பு கொள்கையால் பெரியார் சிறைக்குச் சென்றார்.

1938

தமிழியக்கம் இராசக்காமங்கலத்தில் தோன்றியது. இந்திக் கொள்கையின் தூண்டுதலால் திராவிட நாடு கொள்கை உருவானது.

1939

தாளமுத்து. மொழி காக்கும் பணியில் தன்னுயிர் ஈந்தத் தமிழர்.

1939

இரண்டாம் உலகப் போர் ஆரம்பம்.

1940

திராவிடநாடு கொள்கை வடிவம் பெற்றது.

1942

'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் வலுபெற்றது.

1944

சேலம் மாநாட்டில் திராவிடக் கழகம் உருவானது.

1945

மத்தானியேல் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கினார். தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் இயக்கம் முழுவடிவில் இயங்கியது. 1945 நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு போட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவு. இறந்தோர் எண்ணிக்கை 6 மில்லியன்.

1947

காவல் துறையினர் திட்டமிட்டு தாய்த் தமிழக இயக்கத்தை ஒழிக்க முனைந்தனர். மக்கள் பொங்கி எழுந்தனர். மாங்காட்டுச் செல்லையா, தேவசகாயம் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர்.

1947

ஓமந்தூர் இராமசாமியின் தலைமையில் அமைச்சரவை ஏற்பட்டது.

1947

ஆகஸ்ட்டு திங்கள் 14 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றது. திராவிட பண்பாடு தொடர்பானவர்கள் பெரும்பாலோர் தமிழகத்தில் சமூகத் தீமைகளாலும், சாதித் தீமைகளாலும் நசுங்கித் தீர்வுகாணாது தவித்தனர் என்பது வரலாற்று உண்மையானது. மனோன்மணியம் சுந்தர்ம், ந.கந்தையா திராவிடர் பண்பாட்டுப் பழமையை, பெருமையை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்தினர்.

No comments:

Post a Comment