Thursday 15 October 2015

பேரீச்சையின் மருத்துவக் குணம்

 பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் பேரீச்சை உண்பது டானிக் சாப்பிட்டது போலாகும். சொல்லப்போனால் மற்ற டானிக்குகளைவிட மேம்பட்டது என்பதே உண்மை. பேரீச்சையில் இருந்து தயாரிக்கப்படும் 'சிரப்' வயிற்றுப்போக்கு, நீரிழிவுக்குப் பரிகாரமாகும்.


பேரீச்சை உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் தன்மை காரணமாக அதுவும் ஒரு மருந்தைப்போல் மதிக்கப்படுகிறது. எளிதில் சீரணமாகும். சக்தியை வழங்கும்.

பாலில் பேரீச்சம் பழத்தை இட்டுக் காய்ச்சினால் அது சிறந்த ஆரோக்கிய பானமாகிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் நோயாளிகள் என்று எல்லோருக்கும் உகந்தது.

குடல் தொந்தரவுகள்
பேரீச்சையில் உள்ள நச்சுப்பொருள் ஒன்று குடல் உபாதைகளுக்கு நல்ல பரிகாரமாக அமையும். நம் குடலில் உடம்புக்கு நல்லது செய்யும் பாக்டீரியா காலனியை நிறுவுவதிலும் ஒத்தாசை புரியும்.

மலச்சிக்கல்
இரவில் பேரீச்சம்பழதை தண்ணீரில் ஊறவைத்து மறு நாள் காலையில் அருந்த மலச்சிக்கல் தீரும்.

இருதய பலவீனம்
பேரீச்சம் பழத்தை தண்ணீரில் இரவு முழுக்க ஊறவைத்து, காலையில், அதே தண்ணீரில் பழத்தைப் பிசைந்து விதை நீக்கி உட்கொள்ளலாம். இப்படி வாரம் இருமுறை உட்கொண்டுவர இருதயம் உறுதி அடையும்.

பால் சார்ந்த பலவீனம்
பால் சார்ந்த பலவீனத்துக்கு பேரீச்சம்பழம் உபயோகமாக இருக்கும். ஒரு கைப்பிடி பேரீச்சம்பழத்தை வெள்ளாட்டுப்பாலில் ஊறவைத்து (இரவு முழுதும்) காலையில் அதே பாலில் உண்ணவேண்டும். இந்தத் தயாரிப்பில் ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கொள்ளவும். உறவுக்கான ஆற்றல் மேம்படும்.

No comments:

Post a Comment