Thursday 15 October 2015

மர்மங்கள் நிறைந்த ஒரு மாவீரனின் இறுதி நாட்கள் .....

26.01.1941 நேதாஜி இந்தியாவை விட்டு பிரிந்து சென்ற நாள் ...... இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

போரின் துவக்கத்தில், பிரித்தானிய படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார்.

அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது.

எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசு விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசியக் காவலர்கள் சாதாரண உடையில் 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர்.

26.1.1941 இரவிலிருந்து நேதாஜி அவருடைய அறையில் இல்லை என்றும் இருப்பிடம் பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.

15. 01. 1941ல் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார்.

ஒரு காரில், கொல்கத்தாவிலிருந்து ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார்.

பெசாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்து இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் ஆப்கானிஸ்தான் சென்றார்.

ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார்.

அவர் ஜெர்மனி வந்த செய்தியை 28.03.1941ல் ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன.

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார்.

நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

நேதாஜி சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களால் சுமார் 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.

21.10.1943ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார்.

டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார்.

ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் இப்படை தவித்தது. மனம் தளராமல் இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.

அதற்கு பிறகான நேதாஜி பற்றிய உண்மைகள் உலகம் அறியவில்லை.

No comments:

Post a Comment