சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.
01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்
02. எடுத்துக்காட்டாக C டிரைவில் mydoc என்ற போல்டரில் உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents and Settings \ mydoc.txt
03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options Menu தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ் ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.
04. இனி Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.
05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.
No comments:
Post a Comment